60 வயதில் ஜோடியானவர்கள்! முகுல் வாஸ்னிக் திருமணத்துக்கு காங்கிஸார் வாழ்த்து!

Published:

mukul wasnik - 2026

காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் தமது 60ஆவது வயதில் தனது நீண்டகால பெண் நண்பரான 60 வயது ரவீனா குரானாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மஹாராஷ்ட்டிராவைச் சேர்ந்தவர் முகுல் வாஸ்னிக்! தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக பதவி வகித்து வருகிறார். தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக உள்ள இவர், சில மாநிலங்களில் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

முகுல் வாஸ்னிக் சோனியாவின் நம்பிக்கையை பெற்றவர். ராகுல் ராஜினாமா செய்யவிருந்த போது காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படலாம் என்று பேசப்பட்ட போது முகுல் வாஸ்னிக் பெயர்தான் அடிபட்டது.

தமது 60 வயது வரை திருமணம் செய்யாமல் காலம் தள்ளி வந்த முகுல் வாஸ்னிக், தற்போது தமது நெடுநாள் தோழி ரவீனா குரானாவை திருமணம்செய்து கொண்டுள்ளார்.

தில்லியில் உள்ள ஒரு நட்சத்திர மஹாலில் ரவீனா குரானா – முகுல் வாஸ்னிக் திருமணம் நடைபெற்றது. ரவீனா ஒரு தொழில் அதிபர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img