கோமாளி நடிகையின் கோமாளித் தனமில்லா ஜிம்னாஸ்டிக்ஸ்!

Published:

comali samyuktha hegde - 2026

கன்னடம், தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

samyk - 2026

பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்துவிட்டார் சம்யுக்தா ஹெக்டே! இதை அடுத்து கோடம்பாக்கத்தில் அடுத்த வாய்ப்புகளை எதிர்நோக்கி முயற்சிகளைச் செய்து வருகிறார்.

samyukta hegde3 - 2026

கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் ஸ்கூல் காதலியாக வந்து அசத்தினார் சம்யுக்தா ஹெக்டே. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் பப்பி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

samyukta hegde1 - 2026

நடிப்பு மட்டுமின்றி, வொர்க் அவுட் விஷயத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார் சம்யுக்தா. கம்பியில் தொங்குவது, ஜிம்னாஸ்ட்க் விளையாடுவது, கயிற்றில் நடப்பது என்று அவ்வப்போது ஏதாவது செய்து படங்களை வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

samyukta hegde4 - 2026

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வொர்க் அவுட் வீடியோவை பதிவிட்டுள்ளார் சம்யுக்தா. மிகவும் கடினமான நின்ஜா சர்க்யூட்டில் அவர் கம்பியில் தொங்கி, பிறகு வேறு கட்டையை பிடித்து ஏறி வொர்க் அவுட் செய்து முடிக்கும் காட்சியை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், சம்யுக்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
samyukta hegde2 - 2026

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அண்மையில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் தன் முன்னழகு தெரிய பதிவிட்ட படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி வருகின்றன.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img