எந்தெந்த பணி வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த ஸ்லோகம் படிக்க வேண்டும்?
விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் தோத்திரங்களை தினமும் படிப்பதால் குடும்ப அங்கத்தினர்களிடையே இருக்கும் வேறுபாடுகள், மனஸ்தாபங்கள், சண்டைகள் நீங்கிவிடும். அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பர்.
விஷ்ணு சகஸ்ரநாமம் தினமும் படிப்பதால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் தலை எடுக்காது. அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம் தினமும் படித்தால் நடத்தும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதோடு புதிதாக தொடங்கிய தொழிலில் வெற்றி கிடைக்கும் .
சூரிய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் தினமும் படித்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலையற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து பலன் கூடிவரும் .
லக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி தினமும் பாராயணம் செய்தால் பிள்ளைகளுக்கு நற்குணம் மிக்கவர் களோடு திருமணம் கைகூடும். திருமண வேலைகள் கூட தடங்கலின்றி நன்கு நிறைவேறும்.
நவக்கிரக ஸ்தோத்திரம் தினமும் படிப்பதால் கடன் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் . அதோடு செல்வம் தொடர்பான எந்த தொந்தரவும் தலை எடுக்காது.
ஹயக்ரீவ ஸ்தோத்திரம், சரஸ்வதி துவாதச நாமம் தினமும் படிப்பதால் மாணவர்களுக்கு நல்ல கல்வி அறிவோடு படிப்பிலே கவனம் வளரும்.
கோபால ஸ்தோத்திரம் தினமும் படிப்பதால் சந்தானம் இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை உண்டாகும். அதோடு கர்ப்பிணிகள் இதனை தினமும் படிப்பதால் சுகப்பிரசவம் ஏற்படும்.