மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் சுனீல் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடம் உள்ளது. தில்லி ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வீரேந்திர சேவாக் பெயரில் ஒரு கேட் உள்ளது. அதுபோல், சொந்த மண்ணைச் சேர்ந்த புகழ்பெற்ற தோனியின் பெயரை ராஞ்சி மைதானத்தில் ஒரு பெவிலியனுக்கு வைத்துள்ளனர். ஆனால் அதைத் திறந்து வைக்க அவர் மறுத்துவிட்டாராம்!

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப் படுகிறது. இருப்பினும் இதற்காக சிறப்பான ஏற்பாடு எதையும் ராஞ்சி கிர்க்கெட் சங்க அசோஷியேஷன் செய்யவில்லை.

இந்நிலையில், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தேபோசிஸ் சக்ரபோர்த்தி கூறுகையில், கடந்த 2017-ல் நடந்த கிரிக்கெட் சங்க நிர்வாகக் கூட்டத்தில் இந்த மைதானத்தின் ‘நார்த் பிளாக் ஸ்டாண்ட்’ பகுதிக்கு தோனியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தோம். மேலும், அதனை தோனியே திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம்.

அதன்படி, ‘தோனி பெவிலியன்’ ஐத் திறந்து வைக்க வருமாறு எம்.எஸ்.தோனியை அழைத்தோம். ஆனால் அவரோ, நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என் வீடு இது. என் வீட்டை நானே திறந்துவைப்பதா என்று கூறி, தன்னடக்கத்துடன் அதனை மறுத்துவிட்டார்” என்றார்.

News in Brief: Mahendra Singh Dhoni is quintessentially a modest man and no wonder he has politely declined to inaugurate the pavilion named after him at the JSCA Stadium, ahead of India’s third ODI against Australia.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...