ஒன்றேகால் பக்க நாளேடு! காணாமல் போன தங்கம்! காட்டிக் கொடுத்த அரசியல்வாதிகள்!

தினசரி ஒன்னேகால் பக்க நாளேடு! பிப். 30, 2019:

நம் நாட்டின் இருப்பில் உள்ள, ரிசர்வ் தங்கம் திடீரென காணாமல் போனது என்று விஷ்ணுதாஸ் மிஸ்ரா அறிக்கை  ஒன்றினை சமர்ப்பித்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, நமது பொருளாதாரம் தங்கத்தை மையமாகக் கொண்டது. இந்நிலைஇல் தங்கம் காற்றோடு காற்றாக கரைந்து போனது எங்களுக்கு மிகப் பெரும் ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்சி அளிக்கும் வகையிலும் இருந்தது. உங்களைப் போலவே நாங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

இந்நிலையில், அரசு தலைமை  வழக்கறிஞர்  இது குறித்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், இது திருட்டுப்.போன தங்கம். பாதுகாப்பாக வைத்திருந்தது. அதனால் இதைப் பற்றி ஊடகங்கள் எதுவும் பேசக் கூடாது என்றார்.

இதைப் பற்றி தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்ட போது, எங்கள் தங்கம்.மோடி இருக்கையில் இது பற்றி நமக்கேன் கவலை என்று கூறினார்.

இன்னும் இந்தத் தங்கம் எவ்வளவு என்று எண்ணி முடிக்காத்தால் காணாமல் போனதும் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியாது என்று கூறினார் நிதிச் செயலாளர்!

இந்நிலையில், இது காங்கிரஸின் திட்டமிட்ட சதி என்று நிதி அமைச்சர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதனை வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறைமுகமாகக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி,  எங்கள் ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்று நம்பிக்கை அளித்தார்.

இதனிடையே, காணாமல் போன தங்கம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நானாக இருந்தால் இதனை இத்தாலியில் வைத்து பாதுகாத்திருப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தத் தங்கத்தை  ஸ்விஸ் வங்கியில் தேடிப் பார்க்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை  தெரிவித்தார் ப.சிதம்பரம்.

இருப்பினும், என்ன இருந்தாலும் இதனால் எல்லாம் அதிமுக ஆட்சிக்கு எந்த பாதககமுமில்லை; இன்னும் நூறு ஆண்டு அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் என்று உறுதி கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கூட்டாக விட்ட அறிக்கையில்,  இது ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்திக்குச் சென்றது ஆரிய சதி என்று கருத்துதெரிவித்தனர்.

  • பட்டுக்கோட்டையார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.