அடடே ஐடியா… அழகு ஐடியா! இலவச ஹெல்மெட் நிலையம்! அசத்தும் இளைஞர்கள்!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சென்னை துணுக்குகள் லைஃப் ஸ்டைல்

helmet free supplies - 2026

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற முழக்கத்துடன், இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தி வரும் இளைஞர்கள் இப்போது செய்திகளில் தனி இடம் பிடித்துள்ளனர்.

கடலூர் -சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள கிராமமான பெரியபட்டில் உள்ள மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் என்ற சார்பில் இளைஞர்கள் இலவச ஹெல்மெட் வாடகை நிலையத்தை அமைத்து உள்ளனர்.

இதன்படி இந்த பெரியப்பட்டு பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் 50க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன

இரண்டு சக்கர வாகனத்தில் இந்தப் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிதம்பரத்திற்கு – கடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் பொழுது இந்த ஹெல்மெட்டை அவர்கள் எடுத்துக்கொண்டு வாகனத்தின் பதிவு எண்ணையும் அவர்களுடைய செல்பேசி எண்ணெயும் பதிந்து வைத்தால் போதும்.

அவர்கள் பயன்படுத்தி விட்டு மீண்டும் வந்து இதே இடத்தில் வைத்துவிட வேண்டும். இதுவரையில் இதிலிருந்து ஒரு ஹெல்மெட் கூட எவரும் வீட்டுக்கு தனியாக எடுத்துச் செல்லவில்லையாம். பயன்படுத்தியவர்கள் மீண்டும் எடுத்து வந்து அதே இடத்தில் வைத்துவிட்டுச் செல்வது தான் சிறப்பான ஒன்று என்கின்றனர் இந்த இளைஞர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.