- கர்பிணிப் பெண்ணுக்கு அரிதான ஆபரேஷன்.
- இரண்டு கர்பப்பை உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை.
- தாயும் சேயும் நலம்.
இரண்டு கர்ப்ப பைகளோடு பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவ சுகாதார அமைச்சர் ஈட்டல ராஜேந்திர் உத்தரவுபடி ஹுஜூராபாத் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உயிரை காத்தனர்.
ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டம் மொகசிந்தலு கிராமத்தைச் சேர்ந்த ஏடு கொண்டலு, ஜெயம்மா தம்பதிகள் சிறிது காலம் முன் கரீம்நகர் மாவட்டம் ஜம்மிகுண்ட வந்து வீடு கட்டும் மேஸ்திரி பணி செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மகள் தனுஷா கர்ப்பிணி ஆனதால் மாதா மாதம் ஹனுமகொண்டாவில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் காண்பித்து வந்தார்கள்.
பிரசவ தேதி அருகாமையில் வந்ததால் அந்தப் பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு முயற்சித்தார்கள். லாக்டௌன் ஆதலால் சொந்த கிராமம் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரிடம் போனில் கேட்டுக்கொண்டார்கள்.
உடனடியாக செயலில் இறங்கிய அமைச்சர் கர்பிணிப் பெண்ணுக்கு உதவ முன்வந்தார். ஹுஜூராபாத் ஏரியா மருத்துவமனை சூபரின்டெண்டென்ட் டாக்டர் வி பிரவீண் ரெட்டிக்கு உத்தரவிட்டார்.
அதனால் லேப்ராஸ்கோபிக் சர்ஜன் டாக்டர் ஸ்ரீகாந்த் ரெட்டியின் தலைமையில் மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிரமப்பட்டு சிதைந்த கர்பப்பையை நீக்கிவிட்டு சிசுவை பாதுகாப்பாக வெளியில் எடுத்தார்கள். தாயும் சேயும் நலமாக இருப்பது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.