தெலங்காணாவில் 20 சிறு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
corona testing - 2026
  • ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் தனி சிறுவர் பிரிவில் மருத்துவ சிகிச்சை.
  • கொரோனா தொற்றுநோய் சிறு குழந்தைகளையும் விடாமல் துரத்துகிறது.

தெலங்காணா மாநிலத்தில் இதுவரை 20 சிறுவர் சிறுமியர் கொரோனா பாசிடிவ் வந்து துன்புறுகிறார்கள். இவர்களுக்காக பிரத்தியேகமான வார்டு ஏற்பாடு செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுவர்களுக்கு வந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவம் செய்வதில் மருத்துவர்கள் கொஞ்சம் சிரமப் படுகிறார்கள்.

தெலங்காணா மாநிலத்தில் கொரோனா கேசுகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 644 கேசுகள் பதிவாகியுள்ள நிலையில் 18 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இப்போது கொரோனா வாயில் சிக்கிய சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது தெலங்காணா மாநில அரசுக்கு சங்கடமாக உள்ளது. கொரோனா பரவலை கண்ட்ரோல் செய்வதற்காக அரசாங்க இயந்திரம் இரவும் பகலுமாக சிரமப் பட்டு வருகிறது. மருத்துவ ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சேவை செய்து வருகிறார்கள். நோய் பரவிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இவர்களுள் ஒரு மாதம் கூட நிறைவடையாத சிறு குழந்தைகள் கூட உள்ளார்கள்.

பிறந்து 23 நாட்கள் ஆன சிசுவில் இருந்து 12 வயது உள்ள சிறு குழந்தைகள் வரை கொரோனா பாதித்தவர்கள் உள்ளார்கள். இதுவரை தெலங்காணா மாநிலத்தில் 20 பேர் குழந்தைகள் பாசிட்டிவ் என்று அடையாளம் கண்டறிந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவருக்கும் காந்தி மருத்துவ மனையிலேயே ஐசிஎம்ஆர் கட்டுப்பாடுகளின் படி பிரத்தியேக ட்ரீட்மென்ட் அளித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கு தனி வார்டுகளை ஒதுக்கி உள்ளார்கள். அதோடுகூட 20 தனிப்பட்ட மருத்துவர் களையும் நியமித்து மருத்துவம் அளித்து வருகிறார்கள்.

காந்தி மருத்துவமனையில் உள்ள 6வது வார்டில் சிறு குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆயின், பிற உடல்நிலை கோளாறு காரணங்களால் துன்பப்படுகின்றன ஒரு சிறுவனின் கேசு மட்டும் டாக்டர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. மூன்று வயதாகும் அந்த சிறுவனுக்கு பிற ஆரோக்கிய பிரச்சனைகளும் உள்ளன.

அவற்றோடு கூட இப்போது கொரோனாவும் அவனுக்கு வந்துள்ளதால் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாக மாறி உள்ளது . தற்போது அந்த சிறுவனின் நிலைமை சற்று கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறு கின்றனர் மருத்துவர்கள்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

அனைவரும் குழந்தைகளானதால் அவர்களுக்கு எதுவும் புரியாமல் போவதும், சொன்னதை கேட்காமல் இருப்பதும், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றுவதும், அழுவதுமாக உள்ளார்கள். மேலும் பெற்றோர்களுக்குக் கூட அவர்கள் படும் துன்பம் தீவிரமான மன வேதனையை அளித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.