ஏப்ரல் 21, 2021, 8:28 மணி புதன்கிழமை
More

  ஆக.9 மாலை வீடுகள் தோறும் வேல்பூஜை, கந்த சஷ்டி வழிபாடு

  ஆக.9 ஞாயிறு மாலை வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து, வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி சொல்லி வழிபட அழைப்பு!

  முருகபக்தர்களே ! ஆகஸ்டு 9 ம் தேதி மாலை 6 மணிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன ?

  சாது சந்நியாசிகள் மடாதிபதிகள் ஆதினங்கள் ,ஆன்மீக பெரியோர்கள் வேண்டுகோள் :

  கருப்பர் கூட்டம் மற்றும் அவர்களுக்குப் பின்னால் செயல்படும் கூட்டத்தினரை கண்டிப்பதுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க சாது சந்நியாசிகள் மடாதிபதிகள் ஆதினங்கள் ஆன்மீக பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் நம் பகுதிகளில் வீடுகளில் வெளியே சமூக இடைவெளியுடன் ஆகஸ்ட் 9 ம் தேதி மாலை 6 மணி அளவில் ஆடி சஷ்டியை முன்னிட்டு வேல் மற்றும் முருகர் படம் வைத்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் படிப்போம்.

  Translate »