காட்டு பகுதிக்குள் காதல் செய்த ஜோடி! வீடியோ எடுத்து மிரட்டி நகை, செல், பணம் பறித்த கும்பல்!

Published:

lovers

பட்டப்பகலில் காட்டுப் பகுதியில் எல்லை மீறிய காதல் ஜோடியை வீடியோ எடுத்த கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்துக்கு செல்லும் ஆள்நடமாட்டம் இல்லாத நான்கு வழிச்சாலை பகுதிக்கு காதல் ஜோடிகள் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் எல்லை மீறியுள்ளனர். இதனை மறைந்திருந்து பார்த்த சிலர், இருவரையும் பிடித்து தரையில் உட்கார வைத்தனர். மேலும் வீட்டில் சொல்லி விடுவோம் என்று மிரட்டி அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக அந்த கும்பல் மிரட்டியதால் காதல் ஜோடி வெளியே சொல்லவில்லை.

ஆனால் அந்த கும்பல், காதலர்களை மிரட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இதையடுத்து காவல்துறையினர் நேரில் சென்று காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதைத் தொடர்ந்து காதல் ஜோடியிடம் புகாரை வாங்கிய காவல்துறையினர் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img