தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

அண்மையில் தென்கொரிய அதிபர் இந்தியா வந்தபோது, மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட் கோட் மிகவும் அழகாக இருக்கிறது என்றும், தனக்கு அது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

தீபாவளிப் பரிசாக தனக்கு வந்த கோட்களைக் கண்டு மகிழ்ந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே, அதை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்தபடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியின் அன்பான செயலுக்கு நன்றி கூறியுள்ள, அந்த கோட்கள் தனக்கு மிகவும் அழகாகப் பொருந்துவதாகவும், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த டிவிட் இப்போது டிவிட்டர் வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி, பலரும் மூன் ஜேக்கு ஜே போட்டு வருகின்றனர்.