மங்கல வாத்தியம் முழங்க… தடுப்பூசி முகாம்!

அடடே... அப்படியா? நெல்லை லைஃப் ஸ்டைல்
panpozhi corona vaccine campaign
panpozhi corona vaccine campaign

செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழியில் மங்கள வாத்தியத்துடன்  கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது.

செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் வைத்து கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. விழாவிற்கு வடகரை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முகம்மதுஇப்ராகீம் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து கொரோனா தடுப்பு முறைகள் குறித்தும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரி்க்கை பாதுகாப்பு  நடவடிக்கை குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

டாக்டா் மதன்கோபால், பிடிஓ. சண்முகசுந்தரம், பண்பொழி பேரூராட்சி செயல்அலுவலா் இராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலைவகித்தனா். செங்கோட்டை வின்சி கம்யூட்டா் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வாசலில் வாழைமரம் கட்டி வண்ணக்கோலங்கள் வரைந்து நாதஸ்வரம், தவில் இசையுடன் தடுப்பூசி போட வந்த பொதுமக்களை வரவேற்றனா்.

panpozhi corona vaccine campaign1
panpozhi corona vaccine campaign1

நிகழ்ச்சியில் செவிலியா் சேதுலெட்சுமி, கணிணி இயக்குநா் பிரேமலதா, வின்சி கம்யூட்டா் தன்னார்வலா்கள், பண்பொழி மஸ்துார் ஊழியா்கள், பண்பொழி வர்த்தக சங்கத்தலைவா் முகம்மதுஇஸ்மாயில்(எ)உல்லாசம், சமூக ஆர்வலா் ராஜராஜன் மற்றும் பண்பொழி பேரூராட்சி முன்கள பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நீண்ட வரிசையில் நின்று ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் முககவசம் அணிந்து வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு சென்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.