
செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 150 ஏழை,எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்.
செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று காலம் துவங்கி இன்று வரையில் தாயின் மடியில் சமூக அறக்கட்டளை சார்பில் ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர் மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது இந்தாண்டு நடந்த விழாவிற்கு வழக்கறிஞா் தலவனார்கணேசபாண்டியன் தலைமைதாங்கினார்.
சமூக ஆர்வலா்கள் வர்மாதங்கராஜ், அருணாசலம், ஹரிஹரகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். தாயின் மடியில் சமூக அறக்கட்டளை நிறவனா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரம அகிலானந்தமகராஜ், சாரதா ஆசிரம யதிஸ்வரிஅம்பாள், ஆகியோர் ஆசியுரை வழங்கினா். பள்ளி தாளாளா் ராம்மோகன், பள்ளி முதல்வா் ராணிராம்மோகன், மூத்த பத்திரிக்கை ஆசிரியா் செங்கோட்டைஸ்ரீராம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.
பின்னா் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலையை அகிலானந்தமகராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சசிகலாபிரேம்குமார், ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் அனிதாஆனந்த்,செயலாளா் கல்யாணி, சாரதா, தென்காசி நகர்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ராஜஅபிராமன் நன்றி கூறினார்.