சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை: கேரள உயர் நீதிமன்றம்

இந்தியா சற்றுமுன்

kerala high court e1543338664856 - 2026

சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லைஎன்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், நடுப்பந்தல் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர வேறு யாரும் தங்கக் கூடாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம் சபரிமலையில் 144 தடை உத்தரவு சட்டப்படி செல்லும் என்றும் உறுதிப் படுத்தியுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கேரள காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும்,  சபரிமலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 2 நீதிபதிகள், ஒரு டிஜிபி அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.