ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்!

Published:

karur makkalnalakkatchi - 2026

கரூரில் சாமானிய மக்கள் கட்சி சார்பில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆர் எம் எஸ் தபால் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தமிழக ஆளுநர் மீண்டும் ஏழுபேரின் கருணை மனுவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிட கழக கரூர் மாவட்ட தலைவர் கு.கி. தனபால் , ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இரா. முல்லையரசு, சாமானிய மக்கள் கட்சி பொதுசெயலாளர் குணசேகரன் , கல்வி மேம்பட்டு இயக்க கரூர் மாவட்ட தலைவர் ம . ராமசாமி, அமராவதி சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தென்னரசு , ஆதித்தமிழர் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் , மே17 இயக்க கரூர் மாவட்ட தலைவர் திலீபன் , காவிரி ஆறு பாதுபாப்பு இயக்கம் சார்பில் ராஜேஸ்வரி உட்பட அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் ஏழு தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினார் .

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img