சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

Avantika Shetty actress - 2026

பெங்களூரு:

சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி.

 

கன்னடத்தில் வெளியான ரங்கீதா ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அவந்திகா ஷெட்டி. இவரை கன்னட பட அதிபர் கே.சுரேஷ் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென அவந்திகா ஷெட்டி நீக்கப் பட்டார்.

இது குறித்து பட அதிபர் கே.சுரேஷ் கூறியபோது, “ராஜூ கன்னடா மீடியம் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் தயாரிக்கும் புதிய படத்துக்கு நடிகர் – நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட அனைவரையும் தேர்வு செய்தேன். படத்தில் கதாநாயகியாக நடிக்க அவந்திகா ஷெட்டியை தேர்வு செய்தேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வேண்டும் என்றே படக்குழுவினரிடம் தகராறு செய்கிறார். யாருடைய பேச்சையும் அவர் கேட்பதில்லை. இதனால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆனால், இது குறித்து கன்னட திரைப்பட வர்த்தக சபையில் நடிகை அவந்திகா ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்…

முதல் நாளில் இருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. அவர்கள் என் நடிப்புத் திறமையின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதை தள்ளிவிட்டு, நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காரணங்கள் சொல்லி பிரச்னைகள் முளைத்தன. போட்ட காசோலை திரும்பியது குறித்து கேட்டேன். தயாரிப்பாளரின் பாலியல் தொல்லை. அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். ஆனால், என் நடிப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி நீக்கியுள்ளார்கள்… என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img