ஆபாச படங்கள் அனுப்பியவரை காட்டிக் கொடுத்த நந்தினி சீரியல் நடிகை!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம். இவர் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் அவரின் முகநூல் பக்கத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர் எனக் கூறிக்கொள்ளும் அவர் தனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருவதாக கூறியுள்ளார்.

இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை பதிவு செய்கிறேன். இனிமையான ரசிகர்கள் பலர் எனக்கு உண்டு. அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு ஆதரவில்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.