கமலுடன் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த வலியவன் படம் தற்போது ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இதனிடையே மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. டைரக்டர் சொன்ன கதை ஆண்ட்ரியாவிற்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதனால் அந்தப் படத்தில் நடிக்க சம்மதமும் சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தில் தலைமுடியை வெட்டி பாப்கட்டிங்கில் வர வேண்டும் என்று இயக்குனர் நிபந்தனை விதித்திருக்கிறார். இதைக் கேட்டதும் ஆண்ட்ரியா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தலைமுடி தான் எனக்கு அழகு. ஒரு போதும் என் தலைமுடியை வெட்ட மாட்டேன் என்று கூறி தலைமுடிக்காக அந்தப் படத்தை உதறி விட்டுள்ளாராம்…!
‘பாப்கட்டிங்’கா? தலைமுடிக்காக பட வாய்ப்பை மறுத்த ஆண்ட்ரியா!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari