அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.

அட.. ஆமா..! அம்ம கவுண்டமணிக்கு 80 வயசா?! ஆச்சரியமாத்தான் இருகும். சுப்பிரமணியம் கருப்பையா என்ற கவுண்டமணி பிறந்தது இதே மே மாதம் 25ம் நாள் 1939ம் வருடத்துலதான் கொங்கு நாட்டின் கண்ணம்பாளையத்தில் பிறந்தவர். கருப்பையா, அன்னம் தம்பதியின்

கவுண்டமணி தனி ஆவர்த்தனமாக நகைச்சுவை காட்டியதை விட, செந்திலுடன் இணைந்து செய்த காமெடிகளே இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப் பட்டு வருகின்றன. இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை ஜோடிகளான லாரல், ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப் படுவதுண்டு!

கவுண்டமணியின் நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகம் ஒன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். அவ்வளவுதான்.. அவர் பெயரும் கவுண்டமணி ஆனது. 26ஆம் வயதில் திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கினார்.

தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை உண்டு. கொங்குத் தமிழ் பேச்சு, நக்கல், வெறுப்பு கலந்த நையாண்டி உரையாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவை.

இவர்களின் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழ ஜோக்குதான்! இன்றளவும் அந்த இன்னொன்னைப் போல் வேறு ஒன்று வரவில்லை என்று சொல்லலாம். அதற்கு அடுத்தது, சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… என்பது! இன்றளவும் அரசியல்வாதிகளின் சாதாரண சூட்சுமங்களை ரசிகனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

750 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். 10 படங்களில் ஹீரோ வேசமும் கட்டிவிட்டார். வில்லன், குணசித்திர பாத்திரங்கள் என திரைப் படங்களில் தலைகாட்டிவிட்ட கவுண்டமணி அண்மைக் காலமாக அமைதியாகவே இருந்து வருகிறார். 1939 – 2019ல் அகவை எண்பதைக் கடந்துள்ள கவுண்டமணிக்கு நம் “தமிழ் தினசரி”யின் பிறந்த நாள் வாழ்த்துகள்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...