தமிழக மாணவர்கள் வருத்தம்! கட்டான காலாண்டு விடுமுறை!

கல்வி தமிழகம்
- 2026

காலாண்டு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் வருத்தமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்க உள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால் காலாண்டு விடுமுறை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது

இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காலாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்லும் நிலை உண்டாகியிருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.