டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி!

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி.

பதவி: பாரஸ்ட் அப்ரண்டிஸ்

காலியிடங்கள்: 158

கல்வித் தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: ரூ.37700-119500

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01-08-2018.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் இந்த http://www.tnpsc.gov.in/latest-notification.html லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுத் தகவல் இந்த சுட்டியில்…

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.