தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் டிக்கெட்க்கு நாளைக்கே ரெடியாகுங்க..!

ஆகவே நாளை தொடங்கும் முன்பதிவு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊர்களுக்குப் போய் கொண்டாட வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்களுக்கான முக்கியக் குறிப்பு இது. இந்த வருடம் தீபாவளி நவம்பர் மாதம் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இடையில் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் உள்ளதால், பலரும் வெள்ளிக்கிழமை இரவே ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவர்.

தற்போது ரயில்களில் சாதாரண டிக்கெட்டுகளை பயணம் செய்யும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்பதால், நாளை முதல் இதற்கான கவுண்ட் டவுன் தொடங்குகிறது. நாளை, மறுநாள், மறுநாள் என மூன்று நாட்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால்தான் இந்த முறை ரயிலில் சிரமம் இன்றி தீபாவளிப் பண்டிகையைக் கழிக்க ஊருக்குச் செல்ல முடியும்.

ஆகவே நாளை தொடங்கும் முன்பதிவு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!