பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. விவாதம் நடத்த தயார் என இருவரும் சவால் விடுத்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் தனது செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சட்டத்தில் எனக்குள்ள அதிகார வரம்புக்குள்தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று கூறினார்.

இதனிடையே, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, சிபிம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  ஆளுநர் கிரண்பேடி டிவிட்டர் மூலம் முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது சரியா ? அதிகார பிரச்சனைக்கு காரணமே கிரண்பேடியின் அகங்காரம்தான் என்று கூறினார்.

முன்னதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த பிப்.14 அன்று தில்லி சென்றிருந்த கிரண்பேடி இன்று அவசரமாக புதுச்சேரி திரும்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி பிப்.,20 வரை சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், பிப்.,20 அன்று நள்ளிரவுதான் புதுச்சேரி திரும்ப உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து நாராயணசாமி தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, கிரண்பேடிக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார் நாராயணசாமி! கிரண்பேடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 5 ஆவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிரண்பேடி அவசரமாக புதுச்சேரி திரும்பியுள்ளார்.

 

ஆளுநர் மாளிகையின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால், முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய போவதாகக் ஏற்கனவே கூறி இருந்த கிரண்பேடி, புதுச்சேரி திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. இருப்பினும், அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...