December 7, 2025, 2:28 AM
25.6 C
Chennai

வெளி மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்களுக்கு உதவி எண்கள்; சிஆர்பிஎஃப் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

kashmiri not allowed - 2025

காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில்  பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை அடுத்து நாடே பெரும் அதிர்ச்சியில் ஆழந்தது. பெரும்பாலான மக்கள் கொந்தளித்துப் போயினர்.

இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காமல், ராணுவத்தை கொச்சைப் படுத்துபவர்கள், அரசியல் ரீதியாக கேலி செய்பவர்கள், பயங்கரவாதச் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் எதிர்மறைக் கருத்துகள் எழுதுபவர்களைக் கண்காணித்து, அவர்களின் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர் பலர். சிலர் அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த காஷ்மீரி மாணவர் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அவர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது போல் நாட்டின் வடமாநிலங்களில் வேறு பகுதிகளிலும் காஷ்மீரி மாணவர்கள், பொதுமக்கள் ஏதாவது பேசி, தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் அவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கும் பொருட்டும் சிஆர்பிஎஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு உதவி எண்களையும் அறிவித்தது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணம், தாக்குதல் சம்பவம் புல்வாமா உள்ளூர் காஷ்மீரி முஸ்லிம்களின் துணையுடன் நடத்தப் பட்டது என்று வெளியான தகவலால்தான்!

கடந்த பிப்.11 ஆம் தேதி,  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனங்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். புல்வாமா மாவட்டம் ரட்னிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி பொதுமக்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

அதேபோல் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புபடை 12ஆம் தேதி பயங்கரவாதிகளைத் தேடி அதே பகுதியில் களம் இறங்கினர். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்புப்படை வீரர்களைக் கல்லால் அடித்து விரட்டினர்.  இதனால் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினரிடம் இருந்து பாதுகாக்க கல்வீச்சு, எதிர்ப்பு என இறங்கியதாகவும், அதனாலேயே  மிகவும் கோரமான ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை தீவிரமாகும் என வதந்திகள் பரவிய நிலையில், காஷ்மீர் முழுதும் பதற்றமான  சூழல் எழுந்தது. மேலும், தில்லி, மும்பை, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும்  காஷ்மீரைச் சேர்ந்த பணியாளர்கள், மாணவ மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக,  அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ராணுவம் உதவி எண்களை அறிவித்தது.

இதனிடையே, டேராடூன் பகுதியில் ஒரு கல்லூரியில் மாணவிகள் தாங்கள் பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப் பட்டதாகவும், எனவே அச்சத்தில் உள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும் தங்களைக் காப்பாற்றுமாறும் டிவிட்டரில் தகவல் கொடுத்தனர். மேலும் இது போல், பலரும் தங்கள் டிவிட்டர் பதிவுகளில், தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அச்சத்தில் இருப்பதாகவும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதை அடுத்து,  சிஆர்பிஎப் டிவிட்டர் பக்கம் செய்துள்ள டிவிட்டில் ”வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்கள், மாணவர்கள் எங்களை எந்த நேரமும் 14411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது 7082814411 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் துன்புறுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ எங்களுக்கு தகவல் அளியுங்கள், உதவுகிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories