செங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு! எஸ்டிபிஐ காரணமா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி

sengottai posters - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்தியும் வீரவணக்கம் என்று மரியாதை தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

இந்து அமைப்புகள் சார்பில் ஒட்டப் பட்டிருந்த இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு கிழிக்கப் பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர் புகார் கூறிய போது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் காஷ்மிரில் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செங்கோட்டையில் வீரவணக்க சுவரொட்டிகள் இந்து அமைப்புகள் சார்பாக ஒட்டப்பட்டன.

செங்கோட்டையில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான பம்பு ஹவுஸ் ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த வீரவணக்க சுவரொட்டியை சில சமுக வீரோதிகள் கிழித்துள்ளனர்!

இது போன்ற செயல்கள், பயங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் மட்டும் தேடாமல் உள்நாட்டிலும் தேடினால் நல்லது என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மேலும் இன்று எஸ்டிபிஐ கொடி ஏற்றப்படுவதால் வீரவணக்க சுவரொட்டி அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால்தான் இதைக் கிழித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிகள் அனைத்துமே அந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வைத்துள்ளனர்! இந்த நிகழ்வுகளை வழக்கம்போல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தால், பாரதிய ஜனதா கட்சி பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்! என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.