
நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு. இரட்டை குழந்தை களோடு சேர்ந்து மரணம் அடைந்தார்.
ஐவிஎஃப் சென்டர் சிகிச்சையால் கர்ப்பம் தரித்தார் அந்தப் பெண்மணி. இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் குழந்தைகளோடு சேர்ந்து மரணமடைந்தார்.
திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் அந்தத் தம்பதியர் பெரிதும் மனம் வருந்தினர். இறுதியில் ஐவிஎஃப் சென்டர் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரித்தார் அந்தப் பெண்மணி. ஆனால் அவருடைய மகிழ்ச்சி நிறைவைச் சந்திக்காமல் பாதியிலேயே முடிந்து விட்டது. நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இரு குழந்தைகளுடன் சேர்ந்து மரணமடைந்ததால் அவர்கள் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
கரீம்நகர் மாவட்டம் சிகுருமாமிடி மண்டலம் ரேகொண்ட கிராமத்தைச் சேர்ந்த ஜூப்க்க கனகய்யா, சைதாபூர் மண்டலம் எலபோதாரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்வரூபா (38) தம்பதிகளுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆண்டுகள் கழிந்தாலும் அந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் உண்டாகவில்லை. குழந்தை பேற்றுக்காக பல கோவில் கோபுரங்களையும் மருத்துவமனைகளையும் சுற்றியும் அலைந்தும் வந்தார்கள். இறுதியில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ வி எஃப் சென்டரில் சிகிச்சை பெற்று எட்டு மாதங்களுக்கு முன் சொரூபா கர்ப்பமானார்.
ஸ்கேனிங் பார்த்த மருத்துவர்கள் இரட்டை குழந்தைகள் என்று கூறினார்கள். அதனால் அவர்களின் குடும்பம் தங்கள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 8 மாதம் நிறைந்ததால் சொரூபா அண்மையில் எலபோதாராமில் உள்ள தன் பிறந்த வீட்டிற்குச் சென்றார்.
வியாழக்கிழமை இதயத்தில் வலி வந்ததால் ஹிஜூராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பிபி அதிகமானதால் ஆபத்தான உடல் நிலையோடு ஐசியுவில் சேர்த்தார்கள். சொரூபா அங்கேயே இறுதி மூச்சை விட்டார்.
குறைந்தபட்சம் குழந்தைகளையாவது காப்பாற்றுங்க என்று சொரூபாவின் கணவர் கனகய்யா டாக்டர்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதனால் சொரூபாவுக்கு ஆபரேஷன் செய்தார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்குள்ளாகவே இரட்டைக் குழந்தைகளும் மரணித்து இருந்தன. அதனால் அந்த குடும்பம் தீவிர சோகத்தில் மூழ்கியது.