
கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை 4 தாத்தாக்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். அவர்கள் 8 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.
லாக்டவுன் போடப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது.. ஊரடங்கை வைத்தே வன்முறைகள் நிகழ்வது அதிர்ச்சி.
லாக்டவுனால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் பலாத்காரம், லாக்டவுனால் விடுதிகளில் அடைந்து கிடக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை என்று கொடூரங்கள் குறையவே இல்லை.

கன்னியாகுமரியிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அவர்.
ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போது குடும்பம் வறுமையில் சிக்கியுள்ளது.. அதனால் வீட்டில் உள்ள பசிக் கொடுமையைப் பொறுக்காமல் 8 வயது சிறுமி அந்தத் தெருவில் உள்ள வீடுகளுக்குச் சென்று உதவி கேட்பது வழக்கமாம். அப்படி உதவி கேட்டுச் சென்றபோதுதான் சிறுமிக்கு பணம் தருகிறோம் என்று சொல்லி எல்லை மீறி உள்ளனர். பண உதவி செய்துவிட்டு, பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு 8 பேர் சிறுமியை சீரழித்துள்ளனர்.
நடந்த சம்பவத்தை வீட்டில் தன் அப்பாவிடம் அழுதபடி அந்தச் சிறுமி சொல்ல, அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு சிறுமியை ஒரு ஆடியோவில் பேச வைத்து அதை ஆதாரமாக வைத்து நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளார்.
அந்த 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள்.. 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர். இந்த 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்! 8 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களை போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.