- 12 நாட்களாக தனது பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கிறார் தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
- கேசிஆர் மிஸ்ஸிங் என்றுகூட சமூக ஊடகங்களில் பரபரப்பாக கருத்துகள் உலா வருகின்றன.
- முதல்வர் கேசிஆர் கடந்த 12 நாட்களாக பண்ணைவீட்டில் தங்கியுள்ளார்.
கடைசியாக, ஜூன் 28-ஆம் தேதி முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கேசிஆர் ஆஜர் ஆனார். அதன்பின் தன்னுடைய பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இப்போது வரையிலும் பிரகதி பவனுக்கு அவர் வரவில்லை.
முக்கியமான அம்சங்கள் மீது பேசுவதற்கு சிஎஸ், டிஜிபி, நிகா ஆபிஸர்கள் ஆகியோரை தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து உரையாடுகிறார். இதற்காக பிரத்யேகமாக பண்ணை வீட்டில் ஒரு ஹால் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
செக்ரடேரியட் கட்டடம் இடிப்பதற்கு முன்னால் முன்தினம் சிஈஸ், டிஜிபி இருவரும் சுமார் 10 மணி நேரம் முதல்வரோடு ஃபார்ம் ஹவுஸ் இல் நடந்த மீட்டிங்கில் பங்கு கொண்டதாக தெரிகிறது.
மிக அத்தியாவசியமான பைல்ஸ் மீது கையெழுத்து போடுவதற்கு ஆபீசர்கள் பார்ம் ஹவுசுக்கு சென்று வருகிறார்கள். மீதி ஃபைல்களை பார்ப்பதில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
லாக்டௌன் ஆரம்பித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான பைல்கள் சிஎம் ஆபிஸிலேயே தங்கி விட்டன என்று அவர்களிடம் பேச்சு நிலவிவருகிறது.
இதனிடையே இப்போதும் தெலங்காணா முதல்வரைக் காணவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.