தடுப்பூசிகள் மருந்துகள் இல்லாவிட்டால் 2021 குளிர்கால முடிவில் இந்தியாவில் நாளொன்றுக்கு 2.87 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாவார்கள்.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியவிலும் 70 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளகியுள்ளது. புதிய பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான செல்கிறது.
இந்நிலையில், தற்பொழுது மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி Massachusetts Institute of Technology (MIT) ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் 2021 நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதன் படி இந்தியாவில் தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாமல் கொரோனா பதிப்பின் நிலை இதே போல அதிகரித்து கொண்டே செல்லுமாயின் வருகின்ற 2021 ஆம் ஆண்டு குளிக்காலத்தில் ஒரு நாளைக்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 2.87 லட்சமாக இருக்கும் என கூறியுள்ளனர்.
இது இந்தியாவில் மட்டுமல்லாமல் அதிக பாதிப்பு கொண்ட 10 நாடுகளாகிய அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, இங்கிலாந்து, நைஜீரியா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் பொருந்துமாம்.