கோசாலையில் துடிதுடித்து இறந்த 100க்கும் மேற்பட்ட பசுக்கள்! காரணம் என்ன?!

Published:

cow death in vijayawada - 2026

விஜயவாடா கோ ஸம்ரக்ஷண சங்கம் நடத்தும் கோசாலை – மாட்டு தொழுவத்தில் ஏராளமான பசு மாடுகள் இறந்து கிடந்தன. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 110 பசுக்கள் துடித்து இறந்தன. மேலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

தீவனம் விஷமானதே பசுமாடுகளின் இறப்பிற்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. இரவு பசுக்கள் உண்ட உணவில் எரு மருந்துகளின் அளவு அதிகமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கோசாலை முழுவதும் இதயத்தை உருக்கும் காட்சிகளாக மாறியது.

எங்கு பார்த்தாலும் பசுமாடுகள் துடிதுடித்து இறந்து கிடப்பதை கண்ட அன்பர்கள் மனவேதனை அடைந்தனர். ஆட்சியர் ஏஎம்டி இந்தியாஜ், அமைச்சர் வெலம்பல்லி ஸ்ரீனிவாசராவ், எம்எல்ஏ வசந்த கிருஷ்ணபிரசாத், ஜாயிண்ட் கலெக்டர் மாதவி லதா முதலானோர் சனிக்கிழமை காலை அவசர அவசரமாக கோசாலைக்குச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அதேநேரம் நோய் நிவாரண வாகனங்களில் வந்து சேர்ந்த கால்நடை பணியாளர்கள், உயிர் இழந்த பசு மாடுகளுக்கு உடற்கூறாய்வியல் செய்து அருகிலேயே பெரிய குழி தோண்டி அவற்றைப் போட்டு மூடினர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

மாநில விலங்கு, மீன் சந்தைத்  துறை அமைச்சர் மோபிதேவி வெங்கட ரமணாராவு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பசுமாடுகள் இறப்பு குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்து அறிக்கை வெளிவந்ததும் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img