கட்டிடங்கள் சேதம் ! லக்சம்பர்க்கில் சூறாவளி சூழ்ந்த மாயம் !

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள்

lakshamber - 2026லக்சம்பர்க்கில் திடீரென வீசிய சூறாவளி காற்றில், கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கின் தென்பகுதிகளான பஸ்சராஜ் மற்றும் பெட்டாங்கீயில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காற்றில், கட்டிடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்தன. மேலும் 160க்கு மேற்பட்ட கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இதில் சிக்கி 14 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மேலாண்மை குழு மூலம் அரசு உதவி வருவதாக அந்நாட்டின் பிரதமர் சேவியல் பெட்டல் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இத்தாலி ரோம் நகரில் வீசிய சூறாவளி காற்றுக்கு பின், தற்போது மீண்டும் சூறாவளி காற்று வீசி சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.