’அந்தரங்க‘ ரகசியத்தை உடைத்த டிவி நிருபர்; ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டதால் ஆள்வைத்து வெட்டிய ஆய்வாளர்?

srivaikuntam polimertv rep - 2026

நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டிவி செய்தியாளர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்து, ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தத் தாக்குதல் பின்னணியில் போலீஸ் இன்ஸ்பெக்டரே இருப்பதாக பரபர தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான பாலியல் புகார் குறித்து செய்தி வெளியிட்ட்டார் பாலிமர் டிவி., நியூஸ் செய்தியாளர்! அவர் மீது கூலிப்படையை ஏவி விட்டு, அரிவாள் வெட்டு நடந்ததாக நேற்றிரவு முதலே அதிர்ச்சி தரத்தக்க வகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் தகவல் பரவியது.

இது குறித்து செய்தியாளர் ஒருவர் தனது பேஸ்புக்கிலும் பரபரப்பாக ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில்…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாலிமர் நியூஸ் டிவி.,யின் செய்தியாளராக பணிபுரிந்து வரும் முத்துவேல், தட்டார்மடத்தில் உள்ள தனது அலுவலகத்தில்  கணினியில் செய்தி டைப் செய்து கொண்டிருந்த போது,  அரிவாளுடன் புகுந்த ரவுடி சண்முகநாதன் உள்ளிட்ட கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

“இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கு எதிரா செய்தி போடுவியாலே…” என்று முத்துவேலை மிரட்டிய படி,  ரவுடி சண்முகநாதன் அரிவாளால் வெட்டியுள்ளார். தலை, வயிறு, மார்பு, கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த முத்துவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டுள்ளனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதை அடுத்து, பலத்த காயத்துடன் போராடிக் கொண்டிருந்த  முத்துவேலு உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு, அங்கெ முதலுதவி அளிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து,  மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வரும் முத்துவேலு, தன்னை கொலை செய்ய கூலிப் படையை ஏவியவர், காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்று வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் விவகாரம் என கூறப்படுவதாவது…

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்தவர் கஜேந்திரன்! இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரை பாலிமர் நியூஸ் செய்தியாளர் முத்துவேல் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கந்துவட்டி வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் உருட்டல் மிரட்டலில் ஈடுபட்டு,  கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்றும் ஒரு  செய்தி வெளியானது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இத்தகைய செய்திகளால் கடுப்பான காவல் ஆய்வாளர், முத்துவேலை ஏதாவது வழியில் சிக்க வைக்க நேரம் பார்த்திருந்துள்ளார். பழிக்கு பழிவாங்க தீபாவளி நேரத்தில்,  அரசு அனுமதித்த 2 மணி நேர கால அளவை விட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்துள்ளார் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்து,  செய்தியாளர் முத்துவேலை கைது செய்ய முயன்றுள்ளார் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்!

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிடப் பட்டதால், அப்போது கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தட்டார்மடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மணல் கடத்தல், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியானது. இதனால் மேலும் கடுப்பான காவல் ஆய்வாளர் கஜேந்திரன், தன்மீது வன்மத்துடன் இருந்ததாகக் கூறியுள்ளார் செய்தியாளர் முத்துவேல்.

கடந்த திங்கட்கிழமை அன்று, வழக்கறிஞர் ஒருவரை காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தாக்கியது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  இதனை முத்துவேல் மட்டும் செய்திக்காகப் படம் பிடித்தாராம். இதனால் கஜேந்திரம் ஆத்திரம் அடைந்ததாக முத்துவேல் கூறியுள்ளார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தனது இடமாற்றத்துக்குக் காரணம் முத்துவேல் என்று கருதிய கஜேந்திரன்,  முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி தன் மீது கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக தான் அளித்த புகாரில் கூறியுள்ளார் செய்தியாளர் முத்துவேல்.

இதை அடுத்து,  இந்தத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம், இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளையும், ரவுடிகளை ஏவிய காவல் ஆய்வாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories