கடலுாரில் நடந்த திருமண விழாவில் மேக்கப் போட வந்த பெண் நகையுடன் ஓட்டம் பிடித்த பெண்ணால் பரபரப்பு…!
கடலுார் பாரதி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், கடந்த 6ம் தேதி, திருமண விழா தடபுடலாக நடந்தது. அப்போது, மணப்பெண் அணிந்திருந்த, 6.5 சவரன் தங்க நகை, காணாமல் போனது. இருவீட்டாரையும் அதிரச்சியில் உறைய வைத்தது. இது குறித்து, இருவீட்டார் சார்பில் கடலுார் புதுநகர் போலீசாரிடம் புகார் கொடுத்தனா். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணப்பெண்ணுக்கு, அலங்காரம் செய்ய வந்திருந்த, கடலுார் உப்பலவாடியைச் சேர்ந்த பாபு மனைவி சுகுணா, 32, என்பவள், நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து நகையை திருடிய சுகுணாவை போலீசார் கைது செய்து 6.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனா்.
மேலும் நகையை திருடிய சுகுணா மீது பஸ் பயணியிடம் நகை திருடியதாக சேத்தியாதோப்பு பேலீசில் வழக்கு ஒன்று உள்ளதும் தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



