அப்பாடா… நல்ல செய்தி! சென்னையில் மழைத் தூறல்! கனமழைக்கு வாய்ப்பு உண்டாம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

Lightning CT - 2026

மழை மழை என்று மாதக் கணக்கில் மந்திரம் போல் முணுமுணுத்ததற்கு பலன் கிடைக்கப் போகிறது. ஆம்… கடைசியாக ஒரு நல்ல செய்தி! சென்னை மாநகரத்தில் கிட்டத்தட்ட 197 நாளாக மழை இல்லை!

இந்த நிலையில் இன்று அல்லது நாளை முதல் சென்னைக்கு மழை வர வாய்ப்பு உள்ளது! சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கிறது! எனவே இன்று நாளை என இரண்டு நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது … என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான்.

இந்நிலையில் 195 நாள்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளது மழை! தற்போது மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது!

இதனிடையே மழை குறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது…

இந்த மழை எப்படி இருக்கும் என்றால் சில இடங்களில் தான் மழை பெய்யும் சென்னையில் எல்லா இடங்களிலும் ஒரே போன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்காது

இன்று ஒரு பகுதியில் என்றால் நாளை ஒரு பகுதியில் மழை பெய்யும்! எனவே சென்னையில் நல்ல மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது! 15 நிமிடம் நன்கு மழை பெய்யும்; அரைமணி நேரம் நன்கு மழை பெய்யும்! சில நேரங்களில் லேசானதாக இருக்கும்! இவ்வாறு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது

அதே நேரம் அரபிக் கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய காற்றில் ஈரப்பதம் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியைப் பொறுத்த அளவில் நல்ல மழைப் பொழிவு இருக்கும்.

கன்னியாகுமரி திருநெல்வேலி பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும், நீலகிரி வால்பாறை ஆகிய இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை 3 நாள்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தனது வீடியோ பதிவில்  குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.