வாய் பிளந்து நிற்கும் முதலை ! வீட்டுக்கூரையின் மேலே !

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்

croko - 2026கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கர்நாடக மாநிலத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகாவில் பெய்த கன மழையால், ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடு ஒன்று முழுவதுமாக மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக நீரில் நீந்தி வந்த முதலை ஒன்று, அந்த வீட்டின் கூரை மீது ஏறி இருக்கிறது. வாயை திறந்தபடி இருந்த பெரிய முதலையை, அருகிலிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

மழை நீர் வடிந்தாலும், இதுபோன்ற ஆபத்தான உயிரினங்கள் எங்காவது ஒளிந்து கொண்டிருக்குமோ என்று பயத்துடன் இருக்க வேண்டிய சூழலில் அங்குள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது

இதற்கு மீட்பு குழுவினர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த அதிர்ச்சி தரும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.