makeshkumar - 2026வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்  வயது 30, ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமாருக்கும், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி  வயது 23,  என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  மகேஷ்குமார் நேற்று காலை தனது மனைவி புவனேஸ்வரியுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூர் வழியாக ரங்காபுரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.makeshkumar 1 - 2026அப்போது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள மேம்பாலம் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையேயான சண்டை அதிகரித்தது. அப்போது, மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கினர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே தகராறு அதிகமானது. இருவரும் ஒருவருகொருவர் கடும் வார்த்தைகளை கூறி சண்டையிட்டனர். இவர்களது சண்டையை அவ்வழியே போவாரும் வருவாரும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

இதனால், மனமுடைந்த மகேஷ் குமார் சட்டென்று  மேம்பாலம் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத புவனேஸ்வரி மேம்பாலம் மேலே இருந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று, மகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் அதிர்ச்சியையும்,சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending