
புதிய மாவட்டங்களுக்கு எஸ்பி.,க்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர். இதில், தென்காசி எஸ்பியாக சுகுணா சிங் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்ட புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங் ,தமிழக அரசால் நியமிக்கப் பட்டுள்ளார். சுகுணா சிங் ஏற்கெனவே தென்காசியில் ஏஎஸ்பியாக பணியாற்றியுள்ளார்!
இவர் தற்போது திருவல்லிக்கேணி – கிரேட்டர் சென்னை- காவல் துறை துணை ஆணையராகப் பணியில் உள்ளார்.
சுகுணா சிங் கடந்த 2013-ல் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஏ.எஸ்.பியாக பணியாற்றினார். இவர் தென்காசி சரக ஏ.எஸ்.பியாக 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
பின்னர் நெல்லை மாநகர இணை ஆணையாளராக பொறுப்பேற்றார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணி க்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய மாவட்டமாக உதயமாகும் தென்காசி மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.