ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published:

chidambaram pc - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் தொடர்ந்து அக்டோபர் 16 ஆம் தேதி அமலாக்கதுறையும் ப. சிதம்பரத்தை கைது செய்தது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், வழக்கில் சிதம்பரம் முக்கியப் பங்காற்றி இருக்கிறார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், ப.சிதம்பரம் தரப்பு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img