16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்!

Published:

tamilnadu police - 2026

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (திருவள்ளூர்) கூடுதல் எஸ்.பி. தில்லை நடராஜன், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 சென்னை, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி.யாக இருந்த டாக்டர் பி.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். (புதிதாக ஏற்படுத்தப் பட்ட பதவி)

கரூர் தலைமையிட கூடுதல் எஸ்.பி. பாஸ்கரன், பதவி உயர்த்தப்பட்டு மதுரை தலைமையிட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை தலைமையிட எஸ்.பி. மகேஷ், சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி ஜி.தர்மராஜன் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜி.சுகுணா சிங், புதிதாக உருவாகப்பட்ட தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சிவகங்கை ) கூடுதல் எஸ்.பி. இளங்கோ, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை) கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை ) கமாண்டன்ட் டி.ஜெயச்சந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பயிற்சி மையப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி. எஸ்.வி.மஹாபாரதி, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி. பி.சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., டி.கண்ணன், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் எஸ்.பி. ஆர்.வேதரத்தினம், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையர் ஏ.மயில்வாகனன், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் எஸ்.மணி, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. எச்.ராதாகிருஷ்ணன், சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பாதுகாப்புப் பிரிவு எஸ்பி எம்.சுதர்சன், சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img