ஏப்ரல் 21, 2021, 5:28 மணி புதன்கிழமை
More

  இன்று நவ.26: அரசியல் அமைப்பு தினம்!

  6 அங்கத்தினர்களும் மூளையைக் கசக்கி ஒரு கோடி ரூபாய் செலவில் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு அரசியல் அமைப்பை

  constitution-of-india
  constitution-of-india

  இன்று நவம்பர் 26 அரசியல் அமைப்பு தினம்!

  ஜனநாயகத்தைக் காக்கும் அமைப்புகள் மூன்று தூண்களாக இருப்பினும் அரசியல் அமைப்பே உயர்ந்தது.

  மிக நீண்ட காலம் வெளிநாட்டார் ஆட்சியில் இருந்த பாரத தேசம் பல உயர்ந்த மகனீயர்களின், உயர்ந்த மனிதர்களின் தியாகத்தின் பலனாக 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவாக அவதரித்தது. நாட்டை ஒரே குடையின்கீழ் நடத்திவைக்கும் அரசியலமைப்பு பிறந்த நவம்பர் 26ம் தேதியை நினைவுகூரும் வகையில் 1979ல் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் எல் எம் சாங்விக்கு ஒரு சிந்தனை வந்தது. அன்று நீதி தினமாக நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தார்கள்.

  இந்திய அரசாங்கம் 2015 ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 26 ஐ இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவித்து அந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஒரு அதிகார அறிவிப்பை வெளியிட்டது. அப்போதிலிருந்து நவம்பர் 26 இந்திய தேசிய நீதி தினமாக மட்டுமின்றி அரசியலமைப்பு தினமாகவும் கொண்டாடி வருகிறோம்.

  அரசியல் அமைப்பை நாம் ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு நவம்பர் 26 க்கு 71 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாகரீகம் பெற்றுள்ள பாரத நாட்டிற்கு இந்த 70 ஆண்டுகள் பெரிய ஒரு விஷயம் இல்லை என்றாலும் வெளிநாட்டவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகமாக ஒரு எழுத்துப்பூர்வமான அரசியலமைப்பு பெற்றுள்ள தேசத்தின் பிரஜைகளாக நாம் இதுகுறித்து பெருமைகொள்ள வேண்டும்.

  பிரிட்டிஷ்காரர்களின் கபந்தக் கரங்களிலிருந்து பாரத மாதாவுக்கு விடுதலை கிடைக்கும் என்று தெரிந்தபின் அரசியலமைப்பை எழுதுவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு முதலில் அரசியலமைப்பு சபையை ஏற்பாடு செய்தபோது அதில் 15 பேர் பெண்களோடு கூட 299 பேர் அங்கத்தினர்களாக நியமித்தார்கள்.

  பிஎன் ராவு அரசியலமைப்பு அறிவுரையாளராக நியமிக்கப் பட்டார். இந்த சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ஆம் தேதி நடந்தது. அரசியலமைப்பை எழுதுவதற்கு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் பிடித்தது. மொத்தம் 299 அங்கத்தினர்கள் இருந்தாலும் முதல் பிரதியின் மீது 284 பேர் கையெழுத்திட்டார்கள்.

  இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பாபு ராஜேந்திர பிரசாத் இருந்தபோது அரசியலமைப்பு சபை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்தது. அரசியலமைப்பின் வடிவமைப்பு செய்த அம்பேத்கர், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் நாட்டிற்கு அரசியலமைப்புக்கு வடிவம் கொடுப்பதில் மிகவும் உழைப்பு செலுத்தினார்.

  கமிட்டியில் இருந்த 6 அங்கத்தினர்களும் மூளையைக் கசக்கி ஒரு கோடி ரூபாய் செலவில் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு அரசியல் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
  1947 நவம்பர் 26 அன்று அப்போதைய அசெம்பிளி இதனை ஆமோதித்து.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »