ஏப்ரல் 10, 2021, 5:18 மணி சனிக்கிழமை
More

  நகை கடன் ரத்து அரசாணை என்ன ஆச்சு? செல்லூர் ராஜு விளக்கம்!

  கூட்டுறவு வங்கி நகை கடன் ரத்து செய்ததற்கான அரசாணையை தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வெளியிடப்படும்

  IMG 20210303 WA0035 - 2

  கூட்டுறவு வங்கி நகை கடன் ரத்து செய்ததற்கான அரசாணையை தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

  மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

  எந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு?…

  மதுரையின் நான்கு தொகுதியிலும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன் என்றார். நான் எதற்கும் தயார் என்று சவால் விட்டார்..

  கூட்டணியில் இருந்து சரத்குமார் விலகியுள்ளாரே என்ற கேள்விக்கு,?

  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போவார், வருவார். அவரைப் பற்றி கவலை இல்லை. நடிகர் என்ற முறையில் கூட கமலை பார்க்க சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.

  அமமுகவை அதிமுகவுடன் இணைக்க பாஜக தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக எழும் தகவல் குறித்து கேட்டதற்கு,?

  அமமுக அதிமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படும் தொண்டனாக உள்ளேன் என்றார்.

  கூட்டுறவு வங்கிகளில் உள்ள நாகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகவில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பியதற்கு,

  நகைக் கடன் ரத்து குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார். அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன்….” என்று சொல்ல வந்தவர் சட்டென்று மழுப்பி அரசாணை வெளியிடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  முதல்வர் அறிவித்து உள்ளார். அது எப்படியாவது நடைமுறைப் படுத்தப்படும். நகைக்கடன் ரத்து செய்ததற்கான அரசாணை குறித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர் வெளியாகும் என கூறினார்..

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  19 − eight =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »