ஏப்ரல் 14, 2021, 12:30 காலை புதன்கிழமை
More

  காப்பியடிக்கும் கலாச்சாரம் என்று நிற்கும்? கொதிக்கும் டைரக்டர்!

  deepika padukone - 1

  பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், விளம்பரங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருக்கிறார். முன்னணி ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனமான லீவைஸ், தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரம்தான் `காப்பி கேட்’ சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

  லீவைஸ் விளம்பரத்தில் தீபிகா தோன்றும் இடம் ஒரு செட். ஒரு டான்ஸ் ஸ்டுடியோ பேக்ரவுண்டில் அந்த விளம்பரக் காட்சிகள் ஓடும். அந்த டான்ஸ் ஸ்டூடியோ பேக்ரவுண்ட், கடந்தாண்டு வெளியான யே பாலெட் படத்தில் இடம்பெறும் டான்ஸ் ஸ்டூடியோவை அச்சு அசலாக நகலெடுத்திருப்பதுதான் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது.

  இதுதொடர்பாக அந்தப் படத்தின் டைரக்டர் சூனி டரபூர்வாலா கூறுகையில், சமீபத்தில் இந்த விளம்பரம் எனது கவனத்துக்கு வந்தது. நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அந்த விளம்பரத்தில் வரும் இடம் அப்படியே எங்களது யே பாலெட் படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்டூடியோ போலவே அச்சு அசலாக இருந்தது. அந்த டான்ஸ் ஸ்டூடியோ செட் எங்கள் பப்ளிக் டிசைனரின் கடின உழைப்பாலும் திறமையான சிந்தனையாலும் உருவானது. இதை காப்பியடித்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் செட் போட எப்படித்தான் மனது வந்ததோ லீவைஸ் விளம்பரக் குழுவினருக்கு? இதை மேற்கத்திய நாடுகளில் செய்திருக்க முடியுமா? இந்தியாவில் காப்பி கேட் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்'' என்று கொதித்திருக்கிறார். பின்குறிப்பு என்ற வாசகத்தோடு,இந்த சர்ச்சைக்கும் தீபிகா படுகோனுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. அது அந்த விளம்பரத்தை எடுத்தவர்கள் மீதுதான் பிரச்சனை’ என்றும் சூனி குறிப்பிட்டிருக்கிறார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  nineteen + fifteen =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »