February 13, 2025, 12:00 PM
25.6 C
Chennai

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை!

  • முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
  • 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது.
  • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிபெரியாறு ஆகிய கிராம மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

ரூல்கர்வ் முறைப்படி முல்லைப்பெரியாறு அணையில் வருகிற 10-ந் தேதி வரை 139.50 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதேபோல் நவம்பர் 20-ந் தேதி வரை 141 அடி வரையிலும், நவம்பர் 30-ந் தேதி வரை 142 அடி வரையிலும் தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதாலும், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும் ரூல் கர்வ் விதிப்படி 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதே வேளையில் 136 அடியை எட்டியபோதே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது ஏன்? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டுமின்றி கடந்த வருடம் அணையின் நீர் மட்டம் உயர்ந்தபோது கேரள மந்திரி மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக அணை பகுதிக்கு சென்று அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி விட்ட சம்பவம் போல் இந்த முறை நடைபெறக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அணை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது. வரத்து 1151 கன அடி. திறப்பு 1269 கன அடி. இருப்பு 5808 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 160 கன அடி. இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories