பஞ்சகுலா: சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோனியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில், கடந்த 2007 பிப்ரவரி 18ஆம் தேதி, லாகூருக்கும் புது தில்லிக்கும் இயக்கப்பட்ட சம்ஜௌதா ரயிலில் அரியானா மாநிலம் பானிபட் அருகே இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 68 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் சௌகான், ரஜீந்தர் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க…

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

காவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்

காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் குற்றம் சாட்டப் பட்டனர். ஆனால், இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக ஒரு சொல்லை உருவாக்கினார். அதுதான் காவி தீவிரவாதம் என்பது.

இதை அடுத்து, 2010 ஆம் ஆண்டில் இந்த வழக்கு புது விதமான நோக்கில் மாற்றப் பட்டது. இந்த மாற்றுதலின் படி, தாங்கள் உருவாக்கிய காவி தீவிரவாதம் என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்க ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸார், இந்து இயக்கங்களைச் சேர்ந்த சிலர் மீது வலுக்கட்டாயமாக பொய்யான புனைவுகளைச் சுமத்தி சுவாமி அஸீமானந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், காலப் போக்கில், இது ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொற்படி உருவாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சிலர் வெளிப்படையாக கருத்துகளைக் கூறினர். நீதிமன்றம் இவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது.

முன்னதாக என்.ஐ.ஏ., நீதிமன்றம் பாகிஸ்தானி பெண்மணி ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்த சாட்சிகளின் மீதான விசாரணை ஆய்வு செய்ய மனு அளித்தார். அது தள்ளுபடி செய்யப் பட்டது.

இந்நிலையில், அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Big Blow To ‘Saffron Terror’ Theory: Four Including Swami Aseemanand Acquitted In Samjhauta Blast Case

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...