பாகிஸ்தான் போர் பற்றி… பஞ்சாங்க கணிப்பு சொன்னது என்ன..!

நாட்டின் முக்கிய நிகழ்வுகள் எது நடந்தாலும், பழைமை வாதிகள் சிலர் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து பதில் சொல்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.

இப்போதும் நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்திய எலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாரதம் தலைமை தாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் பஞ்சாங்கத்தின் துணை கொண்டு, இது முன்னமேயே கணிக்கப் பட்டுள்ளது என்கிறார் கருடன் பஞ்சாங்கத்தைத் தயாரித்தளிக்கும் ஷ்ரேயஸ் முரளி பட்டாச்சார்.

அவர் இது குறித்துக் கூறியபோது, நாம் முன்னரே கணித்திருந்த பலவும் நடந்திருக்கிறது. இந்த வருடமும் அதுபோல் நடந்த நிகழ்வுகள் சிலவற்றை நாம் பகிர்ந்து கொண்டோம். பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்து காணப்படும் என்றும் நாம் கணித்துக் கூறியுள்ளோம் என்றார்.

முன்னதாக இதே போல் ஒரு பஞ்சாங்கத்தில், இந்த வருடம் நாட்டில் வெடி இல்லாத தீபாவளி கொண்டாடப் படும் என்று கூறப் பட்டிருந்தது. அதன்படி நடந்ததும் பெரிதாக பேசப் பட்டது.

தற்போது ஷ்ரேயஸ் முரளி பட்டாச்சார் அளித்த கருடன் பஞ்சாங்கக் குறிப்பின் படி…

இந்த ஆண்டு உலக ஜாதகப் படி, பங்கு வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைந்த மழை, சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு. பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும்..

இந்த ஆண்டு தங்கம், வெள்ளி, பெட்ரோலியப் பொருள்கள் விலை ஏறி இறங்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்து காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது விளம்பி வருடத்தின் பஞ்சாங்கம்.

தற்போது விளம்பி வருடத்தின் மாசி பங்குனி என இரண்டு மாதம் மீதமுள்ளது. அதற்குள் இந்த வருடத்தின் கணிப்புகள் வேறு என்னவெல்லாம் நடக்குமோ என்று திகில் கிளப்புகின்றனர் சிலர்.

இருப்பினும், போர் மேகம்தான் சூழும் என்றும், போர் வராது என்றும் பஞ்சாங்கத்தில் கண்டுள்ள குறிப்பின் படி நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். சிலர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...