இடைஞ்சல் கொடுக்கவே தினகரன் வழக்கு போட்டார்… எடப்பாடி கணீர்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

edappadi pazanisami int.mp4 - 2026

தமிழகத்தில் பலராலும் எதிர்பார்க்கப் பட்ட இரட்டை இலை சின்ன வழக்கில், இன்று தில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அது ஈபிஎஸ் ஓபிஎஸ் அடங்கிய அதிமுக.,வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்தது

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மையான அதிமுக நாங்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், நாங்கள் இந்தத் தீர்ப்புக்காக தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கியுள்ளோம். நல்ல தீர்ப்பு கிட்டியுள்ளது. தினகரன் எங்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதற்காகவே இந்த வழக்கினைத் தொடர்ந்தார்.

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.