800970 - 2026

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோசதனை-சிபிஐ அதிகாரிகள் விளக்கம்..

சற்றுமுன்

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர். 
தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
இதுகுறித்து சி.பி.ஐ கூறுகையில், சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.

800970 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.