Organ donation - 2026

திருச்சி அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் செய்த குடும்பத்தினரின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள சோழன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( 47 ),இவர் கடந்த 1ம் தேதி இருச்சக்கர வாகனத்தில் திருச்சி டோல்கேட்டை அடுத்த அருகே பளூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் சிக்கினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ்க்கு நேற்று மாலை மூளை செயல் இழந்தது.

அரசு மருத்துவர்கள் செல்வராஜின் உறவினர்களை அழைத்து செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தது குறித்து தெரிவித்தனர்.

Organ Donation1 - 2026

இதனை தொடர்ந்து முறையாக ஆலோசனைகள் வழங்கினர் – செல்வராஜின் மகன் அசோக் மற்றும் மகள் கங்கா கல்லூரி மாணவர்கள்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

கண்டிப்பாக அப்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு இரண்டு சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரலை எடுத்து முறைப்படி உடல் உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்கினர்.

தந்தையை இழந்த போதிலும் பிறருக்கு வாழ்வளிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்த செல்வராஜ் குடும்பத்தினரின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending