Kannada actor - 2026

கன்னட நடிகரின் மகன் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கன்னட திரையுலகில் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சூர்யோதயா (Suryodaya). இவருக்கு 20 வயதுடைய மயூர் மகன் இருக்கிறார்.

சூர்யோதயா தனது மகனுடன் அங்குள்ள ஸ்ரீ காந்தகாவல் (Srigandhakaval) பகுதியில் வசித்து வந்துள்ளார். மயூர் அங்குள்ள கல்லூரியில் பி.காம் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று 13 வயது சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். தனது நண்பர் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தில், அண்டை வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுமியை ஏற்றிக்கொண்டு வெளியே சென்று வருவதற்காக இருவரும் புறப்பட்டுள்ளனர்.

இருவர் சென்ற வாகனம் அங்குள்ள பயதரஹள்ளி (Byadarahalli) பகுதியில் சென்றுள்ளது. இதன்போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்புச்சாலையில் செல்லும் சமயத்தில், முன்னாள் சென்று கொண்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மயூரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
myur - 2026

மேலும், சிறுமிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு இருந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மயூரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்து இருந்த சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது கன்னட நடிகர் சூர்யோதயவின் மகன் மயூர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் கன்னட திரைஉலகினரிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending