இப்படித்தான் உடற்பயிற்சி செய்யணும்! வீடியோ போட்ட ராய் லக்ஷ்மி!

Published:

lakshmirai
lakshmirai

15 வருடங்களுக்கு முன்பே திரைத்துறையில் நுழைந்தவர் ராய் லட்சுமி. தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கே ஜோடியாக நடித்தவர்.

அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி அவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பல வருடங்கள் ஆனது. மங்காத்தா திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்தார்.

அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, பாலிவுட் பக்கம் சென்று ஜூலி என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை. ஒருபக்கம் டூ பீஸ், மற்றும் பிகினி உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இல்லை நடனமாடுகிறீர்களா? என பதிவிட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img